வெள்ளத்தில் சிக்கிய சிறுவனை மீட்ட பேருந்து ஓட்டுனர், நடத்துனர்..!
கேரள மாநிலம் இடுக்கியில் வெள்ளத்தில் சிக்கிய சிறுவனை பேருந்து ஓட்டுனரும் நடத்துனரும் தங்களது உயிர்களை பணயம் வைத்து காப்பாற்றியுள்ளனர். கனமழை காரணமாக சாலைகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது.
அதனால் ஆங்காங்கே பேருந்துகள் வாகனங்கள் நீரில் சிக்கிக் கொண்டிருந்தன. அப்போது காரில் இருந்த ஒரு சிறுவனை இறக்க முயன்ற போது ஒரு சிறுவன் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டார்.
அப்போது அருகே நின்று கொண்டிருந்த பேருந்தில் இருந்த நடத்துனரும் ஓட்டுனரும் அவர்களின் உயிரை பணயம் வைத்து அந்த சிறுவனை காப்பாற்றிய பேருந்துக்குள் அழைத்து வந்துள்ளனர்.






