ராமராஜன் இறந்ததாக பரவி வரும் தகவல் வதந்தியே..!
கரகாட்டகாரன் நடிகர் ராமராஜன் இறந்ததாக பரவி வரும் தகவல் தவறானவை என்றும் வதந்திகளை நம்பவேண்டாம் என்றும் ராமராஜன் செய்தி தொடர்பாளர் கூறியுள்ளார். இது தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள அவர் ராமராஜன் பூரண நலத்துடன் இருப்பதாகவும் யாரும் வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.
இரண்டு படங்களில் நடிப்பதற்கு ராமராஜன் தன்னை தயார்படுத்தி வருவதாகவும் விரைவில் இந்த படத்தின் துவக்க விழாவில் ராமராஜன் கலந்து கொள்வார் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.






