சுக்கு நூறாக உடைக்கப்பட்ட கண்ணாடி.. ஆயுதமாக மாறிய விறகு கட்டை..!
கோவையில் உணவு விடுதலை சூறையாடிய விவகாரத்தில் ஐந்து பேரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். கோவை மாவட்டம் ஒண்டிபுதூரைச் சேர்ந்தவர் ராமசாமி. இவர் சிங்காநல்லூர் பகுதியில் உணவு விடுதி ஒன்றை நடத்தி வருகிறார்.
சம்பவத்தன்று ஐந்து பேர் கொண்ட கும்பல் ஒன்று உணவகத்திற்கு உணவருந்த வந்திருந்தது அதில் ஒருவர் பாதையை மறைத்தபடி உட்கார்ந்திருந்தார். இதை பார்த்த ராமசாமி அவரை நகர்ந்த அமரும்படி கூறிய நிலையில் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
பின்னர் ஆத்திரமடைந்த அந்த கும்பல் ராமசாமியையும் அவரது அப்பாவையும் தாக்கி விட்டு அங்கிருக்கும் பொருட்களை சூறையாடி தப்பிச் சென்றது. இந்த சம்பவம் தொடர்பாக ராமசாமி புகார் தெரிவித்து இருந்த நிலையில் போலீசார் வழக்கு பதிவு செய்து குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.





