--- --:--:-- --

திருமணத்துக்குப் பிறகு ஓடிப்போன மணமக்கள்..!

5

திருமணம் முடிந்த உடனே மணமக்கள் திருமண உடையுடன் ஓட்டப்பந்தயத்தில் ஓடிய வீடியோ ஒன்று ட்ரெண்டாகி வருகிறது. திருமணத்திற்கு முந்தைய சடங்குகள் அனேக பெயரை வியக்கவைக்கும். அது தொடர்பான ஏராளமான வீடியோக்கள் இணையத்தில் உலா வருகின்றன.

 

தற்பொழுது திருமணத்திற்குப் பிந்தைய வினோத நிகழ்வுகளும் இணையத்தில் உலா வரத் தொடங்கியுள்ளனர். அந்த வகையில் சமீபத்தில் டுவிட்டரில் தரப்பட்டுள்ள ஒரு வீடியோவில் புது மாப்பிள்ளையும் மணப்பெண்ணும் கிராமப்புற மண் சாலையில் ஓடுவது போன்ற வீடியோ அனைவரையும் கவர்ந்து வருகிறது.

 

எதற்காக புதுமணத்தம்பதிகள் ஓடுகின்றனர் என்ற விவரங்கள் வெளியாகவில்லை. சில ஆண்டுகளுக்கு முன்பு மகாராஷ்டிர மாநிலத்தில் மணமக்கள் 25 கிலோ மீட்டர் தொலைவு ஓடி தங்களின் திருமணத்தை பதிவு செய்த நிலையில் தற்பொழுது அது போன்ற வீடியோ இணையத்தில் உலா வரத் துவங்கியுள்ளது.

 

Right Menu Icon