--- --:--:-- --

தனியார் பள்ளி வேன் ஏறி சிறுவன் உயிரிழப்பு

7

கடலூர் மாவட்ட நெல்லிக்குப்பத்தில் தனியார் பள்ளி வேன் ஏறி சிறுவனுக்கு நடந்த நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சோளவள்ளி பகுதியை சேர்ந்த பரணி என்பவரது 4 வயது மகன் விக்ரம் தனியார் பள்ளி ஒன்றில் எல்கேஜி பயின்று வந்தார்.

 

பள்ளி முடிந்து வீட்டிற்கு வேனில் வந்து இறங்கிய சிறுவன் விக்ரம் வீட்டிற்கு செல்வதற்காக திடீரென வேனின் முன்பாக சென்றுள்ளார். இதனை கவனிக்காத ஓட்டுநர் முன்னேறி சென்றதால் சிறுவனின் மீது பேருந்து ஏறி இறங்கி உள்ளது.

 

இதில் சம்பவ இடத்திலேயே சிறுவன் உயிரிழந்தான். தகவலறிந்து சென்ற போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Leave a Reply

Right Menu Icon