--- --:--:-- --

அதிகநேரம் செல்போனில் விளையாடிய சிறுவனை தாய் திட்டியதால் சிறுவன் தற்கொலை..!

6

ரூரில் செல்போனில் அதிகநேரம் விளையாடி வந்த சிறுவனை தாய் கண்டித்ததால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டான். பசுபதி பாளையத்தில் கணவனைப் பிரிந்து தாய் வீட்டில் வசித்து வரும் ராமாயி கட்டுமான பணிகளுக்கு சென்ற தன் மகனையும், மகளையும் படிக்க வைக்கிறார்.

 

இந்நிலையில் அவரது 13 வயது மகன் ராஜேஷ் அந்த பகுதியில் சிறுவர்கள் உடன் இணைந்து அதிக நேரம் செல்போனில் விளையாடி வந்ததால் ராமாயி அவரை கண்டித்துள்ளார். இதனால் மனமுடைந்த ராஜேஷ் தாயார் வேலைக்கு சென்றதும் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

 

அக்கம்பக்கத்தினர் கொடுத்த தகவலின் பேரில் சிறுவனின் உடலை மீட்ட போலீசார் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Leave a Reply

Right Menu Icon