நடிகர் சூர்யாவின் பழைய அலுவலகத்திற்கு வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை..!
சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள நடிகர் சூர்யாவின் பழைய அலுவலகத்தில் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை நடத்தினார். வெடிகுண்டு வைத்திருப்பதாக கட்டுப்பாட்டு அறைக்கு மிரட்டல் வந்ததை அடுத்து மோப்ப நாய் உதவியுடன் சோதனை நடைபெற்றது.
இதுகுறித்து விசாரணை நடத்தியதில் 6 மாதத்திற்கு முன்னதாகவே சூர்யாவின் அலுவலர்கள் இடமாற்றம் செய்யப் பட்டுள்ளதாகவும் தற்போது மர்ம நபர் கூறிய முகவரியில் தனியார் நிறுவனம் ஒன்று செயல்பட்டு வருவதாகவும் தெரியவந்துள்ளது.






