செந்தில் பாலாஜிக்கு குறையாத ரத்த அழுத்தம்..!
சென்னை ஓமந்தூரார் அரசு உயர் சிறப்பு மருத்துவமனையில் அமைச்சர் செந்தில் பாலாஜி நேற்று முன்தினம் அனுமதிக்கப்பட்டார். செந்தில் பாலாஜிக்கு ரத்த அழுத்தம் தொடர்ந்து அதிகமாக உள்ளதால் அதனை குறைக்க சிகிச்சை அளிக்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
உணவு எடுத்துக் கொள்வதற்கு முன்பான ரத்த பரிசோதனைகள் முடிந்துள்ள நிலையில் இன்று எம்ஆர்ஐ ஸ்கேன் எடுக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. செந்தில் பாலாஜிக்கு ரத்த அழுத்தம், குடல் புண் உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு சிகிச்சை அளிக்கப்படுவதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.






