--- --:--:-- --

திருவாடானையில் நூதனத் திருட்டு: ஆட்டையும், இருசக்கர வாகனங்களையும் திருடிச் சென்ற நபர் – சிசிடிவி வீடியோ வைரல்!

13

ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை தாலுகா கல்லூர் அருகே பழைய இரும்பு வியாபாரம் செய்து வருபவர் அன்புச்செழியன். இவர் தனது குடோன் முன்பாகச் சாவியுடன் ஸ்கூட்டியை நிறுத்திவிட்டுச் சென்றுள்ளார். பின்னர் திரும்பி வந்து பார்த்தபோது ஸ்கூட்டி காணாமல் போயிருந்தது கண்டு அதிர்ச்சியடைந்தார்.

 

​அங்குள்ள சிசிடிவி (CCTV) கேமரா பதிவுகளை ஆய்வு செய்தபோது, கைலி அணிந்த நபர் ஒருவர் சர்வ சாதாரணமாக நடந்துவந்து அந்த வாகனத்தைத் திருடிச் சென்றது தெரியவந்தது. அவ்வாறு திருடிச் செல்லப்பட்ட ஸ்கூட்டி, மங்களக்குடி பகுதியில் சென்றபோது பெட்ரோல் தீர்ந்து நின்றுவிட்டதாகத் தெரிகிறது. அத்துடன் நிற்காத அந்த நபர், மங்களக்குடியைச் சேர்ந்த இப்ராஹிம் என்பவரின் வீட்டு வாசலில் சாவியுடன் நிறுத்தப்பட்டிருந்த டிவிஎஸ் எக்ஸ்எல் (TVS XL) வாகனத்தையும் திருடியுள்ளார். மேலும், அங்கிருந்த ஒரு ஆட்டையும் திருடிக்கொண்டு திருவாடானை வழியாகத் தப்பிச் சென்றுள்ளார்.

 

​இச்சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி
வருகின்றன.தனது இருசக்கர வாகனம் மற்றும் ஆடு திருடுபோனது குறித்து இப்ராஹிம் திருவாடானை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில், சிசிடிவி பதிவுகளின் அடிப்படையில் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி, திருட்டில் ஈடுபட்ட நபரைத் தேடி வருகின்றனர்.

Leave a Reply

Right Menu Icon