--- --:--:-- --

வானில் வட்டமிட்ட பறவைகள் திடீரென கொத்தாக இறந்த காட்சி..

7

மெக்சிகோவில் கூட்டமாக வானில் வட்டமிட்ட பறவைகள் கொத்தாக திடீரென கீழே விழுந்து செத்து மடிந்த காட்சிகள் வெளியாகி உள்ளது. வடக்கு மெக்சிகோவில் பறவைகள் சாலையில் ஆங்காங்கே சிதறிக்கிடந்தன.

 

கனடாவிலிருந்து குளிர் காலத்திற்காக மஞ்சள் தலை கொண்ட இந்த பறவைகள் இடம் பெயர வந்ததாக கூறப்படுகிறது. இங்குள்ள தொழிற்சாலை ஒன்றில் இருந்து வெளியேறிய நச்சு வாயுவை சுவாசித்து இருக்கலாம் அல்லது உயர் மின் அழுத்த கம்பியில் உரசியதால் பறவைகள் இறந்திருக்கலாம் என உள்ளூர் கால்நடை மருத்துவர்கள் தெரிவித்தனர்.

 

Right Menu Icon