பிக் பாஸ் தர்ஷன் என்னை ஏமாத்திட்டாறு! சனம் ஷெட்டி பரபரப்பு புகார்!
பிக்பாஸ் தர்ஷன் திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றி விட்டதாக சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் மாடல் அழகியும், நடிகையுமான சனம் ஷெட்டி புகார் அளித்துள்ளார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய சனம் ஷெட்டி தர்ஷனுக்கும், தனக்கும் கடந்த 2019ஆம் ஆண்டு மே மாதம் 12ஆம் தேதி நிச்சயதார்த்தம் நடந்ததாக கூறி, அதற்கான ஆதாரங்களை வெளியிட்டார்.

அதே ஆண்டு ஜூன் 10ஆம் தேதி திருமணம் நடக்கவிருந்த நிலையில் சினிமா நடிகர்களையும் தன்னையும் இணைத்து பேசிய தர்ஷன் திடீரென திருமணத்தை நிறுத்தி விட்டதாகவும் சனம் ஷெட்டி வேதனை தெரிவித்தார். இதனால் தன்னுடைய குடும்பமே மன உளைச்சலில் இருப்பதாகவும் புகார் மனுவில் தெரிவித்துள்ளார்.






