--- --:--:-- --

இன்று நடைபெறுகிறது பாரத ரத்னா விருது வழங்கும் விழா..!

5

பாரத ரத்னா விருதுகள் வழங்கும் விழா டெல்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில் இன்று நடைபெற உள்ளது. இந்த விழாவில் முன்னாள் துணை பிரதமரும் பாஜக மூத்த தலைவருமான எல்.கே.அத்வானிக்கு குடியரசு தலைவர் திரௌபதி முர்மு பாரத ரத்னா விருது வழங்கி கௌரவிக்க உள்ளார்.

 

இதேபோல் மறைந்த முன்னாள் பிரதமர்கள் நரசிம்மராவ் சவுத்ரி சரண்சிங், மறைந்த பீகார் மாநில முன்னாள் முதலமைச்சர் கல்புரி தாகூர், மறைந்த வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் ஆகியோருக்கு பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில் அவர்கள் சார்பாக அவர்களின் குடும்பத்தினர் பாரத ரத்னா விருதை குடியரசு தலைவரிடம் இருந்து பெற்றுக்கொள்ள இருக்கின்றனர்.

 

இந்த விழாவிற்கு துணை தலைவர் ஜெகதீப் தன்கர், பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள் கலந்து கொண்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Right Menu Icon