--- --:--:-- --

திருமணம் குறித்த கேள்விக்கு பதிலளித்துள்ள பாலாஜி முருகதாஸ்..!

8

பிரபல விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் முக்கிய நிகழ்ச்சி தான் பிக்பாஸ், வருடம் தோறும் ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் வட்டம் அதிகம். ரசிகர்கள் பலரும் இதன் அடுத்த சீசனுக்காக காத்து கொண்டு இருக்கின்றனர்.

 

மேலும் கடைசியாக நடந்து முடிந்த பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி ரசிகர்களிடையே பெரிய வரவேற்பை பெற்றது.இதில் பிரபல நடிகர் ஆரி பிக்பாஸ் டைட்டிலை தட்டி சென்றார், அவரை தொடர்ந்து பாலாஜி முருகதாஸ் இரண்டாவது இடமும், ரியோ மூன்றாவது இடமும் பிடித்தனர்.

 

இந்நிலையில் இந்த நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான பாலாஜி முருகதாஸ் தனது இன்ஸ்டாகிராம் மூலமாக ரசிகர்களுடன் எப்போதும் இணைந்துள்ளார். இதனிடையே ரசிகர் ஒருவர் “உங்களின் திருமணம் குறித்து எதாவது திட்டமுள்ளதாக?” என பாலாஜியிடம் கேள்வி கேட்டுள்ளார்.

 

அதற்கு அவர் எல்லோரும் இதை தான் கேட்கிறார்கள், நான் இப்போ தான் காலேஜ் முடிச்ச பீலிங்-ல் இருக்கேன். இன்னும் சில வருடங்களுக்கு நான் திருமணம் குறித்து யோசிக்க விரும்பவில்லை  என பதிவிட்டுள்ளார்.

Leave a Reply

Right Menu Icon