பக்ரீத் பண்டிகை.. நாளை பொது விடுமுறை..!
இஸ்லாமியர்களின் புனித பண்டிகைகளில் ஒன்றான பக்ரீத், நாளை (ஜூன் 7-ம் தேதி) கொண்டாடப்படுகிறது. இந்நாளை மத்திய அரசு பொது விடுமுறை தினமாக அறிவித்துள்ளது. இதேபோல், பல மாநிலங்களும் பொது விடுமுறையாக அறிவித்துள்ளன.
அதனால் நாளை பள்ளி, கல்லூரிகள், அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை ஆகும். அதேபோல், மத்திய அரசு அலுவலகங்கள், தபால் நிலையங்கள், வங்கிகள் உள்ளிட்டவையும் திறக்கப்படாது.






