50அடி ஆழ கிணற்றில் தவறி விழுந்த குட்டி யானை 15 மணி நேரத்திற்கு பின் மீட்பு..!
தர்மபுரி அருகே 50அடி ஆழ கிணற்றில் தவறி விழுந்த குட்டி யானை 15 மணி நேர போராட்டத்திற்கு பின் உயிருடன் மீட்கப்பட்டுள்ளது. தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே பஞ்சப்பள்ளி சின்னாறு அணை அடுத்த இடத்தில் தண்ணீர் இல்லாத 50 அடி ஆழம் கொண்ட விவசாய கிணற்றில் பெண் குட்டியானை தவறி விழுந்துள்ளது.
தகவல் அறிந்து வந்த தீயணைப்பு துறையினரும், வனத்துறையினரும் யானையை உயிருடன் மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இரண்டு மயக்க ஊசி செலுத்தப்பட்டு யானை மயக்கம் அடைந்த பின்னர் கிரேன் உதவியுடன் யானையை தூக்கியபோது பெல்ட் அறுந்ததால் யானை பக்கவாட்டில் விழுந்தது.
இதனை தொடர்ந்து 15 மணி நேரத்திற்குப் பின் மீண்டும் பெல்ட் கட்டப்பட்டு குட்டியானை காயங்களுடன் மீட்கப்பட்டது. யானைக்கு 2 மயக்க ஊசி செலுத்தப்பட்டதால் மயக்க நிலையில் இருக்கும் யானையை வனத்துறையினர் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.






