வலைதளங்களில் பதிவேற்றப்படும் வீடியோக்கள் தணிக்கை : அடுத்த மாத இறுதியில் விசாரணை
சமூக வலைதளங்கள் ஓடிடி தளங்கள் ஆகியவற்றில் பதிவேற்றம் செய்யப்படும் வீடியோக்களை தணிக்கை செய்ய தனி வாரியம் அமைக்க கோரிய வழக்கின் இறுதி விசாரணையை அக்டோபர் 14 நடைபெறும் என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
வழக்கறிஞர் சுதன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்தார் . அந்த மனுவில், சமூகவலைதளங்கள் சினிமா வலைதளங்கள் ஓடி தளங்களில் பதிவிடப்படும் வீடியோக்களை தணிக்கை செய்ய தனி வாரியம் அமைக்க வேண்டும், ஊடகங்கள் இணையதள பயன்பாடு அதிகரித்துள்ள சூழலில் எந்தவித கட்டுப்பாடும் இன்றி யூடியூப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், நெட்பிளிக்ஸ், டிஸ்னி, ஹாட்ஸ்டார், சோனி லைவ், எம் எக்ஸ், பிளேயர் , ஜீபைவ், பிஹைண்வுட்ஸ், கலாட்டா டாட் காம், சினி உலகம் இந்தியா கிளிட்ஸ் ஆகியவற்றில் சர்ச்சைக்குரிய வீடியோக்கள் பதிவிட பட்டு வருகிறது.
பெரும்பாலும் சினிமாவை அடிப்படையாகக் கொண்ட இந்த தளங்களில் பதிவேற்றப்படும் வீடியோக்களை எந்தவித தணிக்கையும் இல்லாமல் இந்தியாவில் உள்ள கோடிக்கணக்கானோர் பார்த்து வருகின்றனர் என தெரிவித்துள்ளார். இந்த மனு மீதான விசாரணை அக்டோபர் 14-ஆம் தேதி நடைபெறும் என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.







