--- --:--:-- --

மகளிர் சுய உதவிக் குழுவில் மாதத்தவணை செலுத்தாததால் நிகழ்ந்த கொடூரம்..!

5

சென்னையில் மகளிர் சுய உதவி குழுவில் கடன் வாங்கி மாதத்தவணை செலுத்தாததால் பெண்ணை இரும்பு கம்பியால் அடித்து கொலை செய்த நபரை காவல்துறையினர் கைது செய்தனர்.

 

காசிமேடு சிங்காநல்லூர் நான்காவது தெருவை சேர்ந்த அஜித்குமார் அவரது மனைவி பிரியா மற்றும் அவரது மாமியார் சிவகாமி ஆகியோர் மகளிர் சுய உதவி குழு நடத்தி வருகின்றனர். இவர்களிடம் அதே பகுதியை சேர்ந்த முருகன் என்பவரது மனைவி 80,000 ரூபாய் கடன் பெற்றுள்ளார்.

 

இதனால் இதற்கான பணத்தை கடந்த 2 மாதங்களாக செலுத்தாததால் கடந்த 24 ஆம் தேதி அஜித்குமார், பிரியா மற்றும் சிவகாமி ஆகியோர் காயத்ரியிடம் இது குறித்து கேட்டுள்ளனர். இரும்பு கம்பியால் காயத்ரி தலை மற்றும் முகத்தில் தாக்கியதாக கூறப்படுகிறது.

 

இதில் பலத்த காயமடைந்த காயத்திரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் இன்று அதிகாலை அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

 

Right Menu Icon