துபாயில் 22 ஆம் தேதி திறக்கப்படவுள்ள செயற்கை நீரூற்று..!
உலகின் மிகப் பெரிய செயற்கை நீரூற்று துபாயில் வருகிற 22-ஆம் தேதி திறக்கப்படுகிறது. துபாய் நகரின் மையப்பகுதியில் திறக்கப்பட இருக்கும் இந்த நீரூற்று தி பாயிண்ட் என்று அழைக்கப்படுகிறது.
புதிய நீரூற்று கடல் பகுதியில் 14 ஆயிரம் சதுரஅடி பரப்பளவில் அமைந்திருக்கும். இதிலிருந்து வெளியேறும் தண்ணீர் 105 மீட்டர் உயரம் வரை செல்லும். 3 ஆயிரம் எல்இடி விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன. இதன் மூலம் பல வண்ணத்தில் தண்ணீர் பீச்சி அடிக்கும்.
இந்த நீரில் 5 வெவ்வேறு வகையான பல நிகழ்ச்சிகள் இரவு 7 மணிமுதல் நள்ளிரவு 12 மணிவரையும் நடக்கும். ஒவ்வொரு அரைமணி நேரத்திற்கும் ஒரு முறை இந்த நிகழ்ச்சியில் பொதுமக்கள் காணும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.







