சென்னையில் நகை, பணத்தை கொள்ளையடித்த நபர் சிசிடிவி காட்சி மூலம் கைது
சென்னை நந்தனத்தில் வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணத்தை கொள்ளையடித்த நபரை காவல்துறையினர் கைது செய்தனர். நந்தனம் எஸ் எம் நகரை சேர்ந்த இளவரசி என்பவரின் வீட்டின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் 5 சவரன் நகை, 26 ஆயிரம் ரூபாய் பணத்தை கொள்ளையடித்து சென்றனர்.
இதுகுறித்து தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் அவர் அளித்த புகாரின் பேரில் விசாரணை நடைபெற்றது. அப்பகுதியில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ததில் கண்ணையன் நகரை சேர்ந்த சூர்யா என்பவர் கொள்ளையடித்தது தெரியவந்தது.
அவர் மீது வழிப்பறி, நகை பறிப்பு உள்ளிட்ட வழக்குகள் இருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்த காவல்துறையினர் அவரிடம் இருந்த நகை, பணத்தை பறிமுதல் செய்தனர்.






