--- --:--:-- --

அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேர்வதற்கான விண்ணப்பப் பதிவு அவகசாம் நீட்டிப்பு..!

1

ரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் முதுநிலைப் பாடப்பிரிவுகளில் சேருவதற்கான இணையதள விண்ணப்பப் பதிவு அவகாசம் ஜூலை 31 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் முதுநிலைப் பாடப்பிரிவுகளில் சேருவதற்கான ஆன்லைன் விண்ணப்பப் பதிவு கடந்த ஜூன் 20 ஆம் தேதி தொடங்கியது.

 

www.tngasa.in என்ற இணையதள முகவரியில் விண்ணப்பங்கள் பெறப்பட்டு வந்த நிலையில், முதலமைச்சர் அறிவுறுத்தலின் படி கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் அறிவித்துள்ளார். இந்த கால நீட்டிப்பினை மாணவ, மாணவிகள் பயன்படுத்தி தாங்கள் விரும்பும் பட்டப்படிப்பில் சேர்க்கை பெற்று பயன்பெறுமாறு அமைச்சர் கோவி. செழியன் கேட்டுக்கொண்டுள்ளார்.

 

மேலும், விண்ணப்பப் பதிவு செய்தவர்களின் தரவரிசைப் பட்டியல் ஆகஸ்ட் 4 ஆம் தேதி கல்லூரிகளுக்கு அனுப்பி வைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிறப்பு ஒதுக்கீடு கலந்தாய்வு ஆகஸ்ட் 11 ஆம் தேதி நடைபெறும் என்றும் பொது கலந்தாய்வு ஆகஸ்ட் 13 ஆம் தேதி தொடங்கும் என்றும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

முதலாம் ஆண்டு முதுநிலை மாணவ, மாணவிகளுக்கு வகுப்புகள் ஆகஸ்ட் 20 ஆம் தேதி தொடங்கும் என்றும் உயர்கல்வித்துறை தெரிவித்துள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon