இடிந்து விழும் தருவாயில் உள்ள தொகுப்பு வீடுகள்..!
மதுரை மேலூர் அருகே பட்டியலின மக்கள் வசிக்கும் தொகுப்பு வீடுகள் இடிந்து விழும் நிலையில் உள்ளதால் மக்கள் அச்சத்துடன் வாழ்ந்து வருகின்றனர். மேலவளவு ஊராட்சிக்கு உட்பட்ட கண்மாய் பட்டி கிராமத்தில் கடந்த 1990 ஆம் ஆண்டு தமிழக அரசால் 25 தொகுப்பு வீடுகள் பட்டியலின மக்களுக்கு கட்டித் தரப்பட்டன.
அதன் பிறகு அரசு அந்த வீடுகளில் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ளவில்லை. ஏழை எளிய மக்கள் என்பதால் வீடுகளை சீரமைக்கும் அளவிற்கு அந்த பகுதி மக்களிடம் வருமானமும் இல்லை. இதன் காரணமாக தற்பொழுது வீடுகளில் கான்கிரீட்டுகள் பெயர்ந்து விழுகின்றன.
பல்வேறு வீடுகள் உள்ளே உள்ள இரும்பு கம்பிகள் தெரியும் அளவிற்கு காட்சியளிக்கின்றன. மழை பெய்யும் போதெல்லாம் கான்கிரீட்டுகள் பெயர்ந்து விழுவதால் வீடுகளில் பொதுமக்கள் அச்சத்துடனே விழுகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு ஐந்து வயது சிறுவன் மீது காங்கிரீட் கல் விழுந்ததில் காயமடைந்தான்.
தகவல் அறிந்து வந்த அதிகாரிகள் அந்த பகுதி மக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். புதிய தொகுப்பு வீடுகள் கட்டி தர பரிந்துரை செய்வதாக அவர்கள் உறுதி அளித்தனர். புதிய வீடுகள் கட்டும் வரை தங்களுக்கு பாதுகாப்பான இடத்தை ஒதுக்க வேண்டும் என அந்த பகுதி மக்கள் கோரிக்கைகளை முன்வைக்கின்றனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





