தவெக மதுரை மாநாட்டுக்கு சென்ற மேலும் ஒருவர் பலி!
மதுரை விஜய் மாநாட்டிற்கு சென்றவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் கஸ்பா அம்பேத்கர் நகர் பகுதியை சேர்ந்தவர் மதன். இவர் கடந்த 21 ஆம் தேதி மதுரையில் நடைபெற்ற தவெக மாநாட்டிற்கு வேலூரில் இருந்து மதுரைக்கு நண்பர்களுடன் காரில் சென்றுள்ளார்.
பின்பு மாநாடு முடிந்து திரும்பி வரும்போது திருச்சி அருகே அனைவரும் ஹோட்டலில் உணவருந்து சென்றனர். அப்போது காரில் இருந்து இறங்கிய மதன் வெகுநேரம் ஆகியும் காணவில்லை.
இதனால் நண்பர்கள் அவரைத் தேடிப் பார்த்துவிட்டு மீண்டும் வேலூர் வந்துள்ளனர். வேலூர் வந்தவுடன் இவரை காணவில்லை என வாட்ஸ் அப் குழுக்களில் பதிவிட்டு தேடி வந்தனர்.
இந்நிலையில் நேற்று அரவக்குறிச்சி பகுதியில் சாலையில் கடந்த 22 ஆம் தேதி விபத்தில் பலியான நிலையில் ஒருவருடைய சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து காவல்துறை மூலம் அவர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், அங்கு சென்ற மதனின் உறவினர்கள் இறந்தது மதன் என அடையாளம் கண்டுள்ளனர். இன்று அரவக்குறிச்சி அரசு மருத்துவமனையில் இருந்து பிரோத பரிசோதனை முடிந்து மதனின் உடலை வேலூருக்கு கொண்டு வந்து கொண்டுள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் அவர் உண்மையிலேயே விபத்தில் விஜயின் தவெக மாநாட்டிற்கு சென்ற வேலூர் இளைஞர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.





