தங்கம் விலையில் மீண்டும் அதிரடி மாற்றம்..!
சேமிப்பின் அடையாளமாக திகழ்ந்து வரும் தங்கமும், வெள்ளியும் போட்டி போட்டு கொண்டு உயர்ந்து புதிய வரலாறு காணாத விலையை தொட்டு வருகிறது. டிசம்பர் மாத தொடக்கத்திலேயே தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது. அதன் பிறகு தங்கம் விலை ஏற்ற இறக்கத்தை சந்தித்து வருகிறது.
இந்த நிலையில், நேற்று 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.30 உயர்ந்து ஒரு கிராம் ரூ.12,030க்கும் சவரனுக்கு ரூ.240 உயர்ந்து ஒரு சவரன் ரூ.96,240க்கும் விற்பனை செய்யப்பட்டது.
தொடர்ந்து இன்றும் தங்கம் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. அதன் படி இன்று 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.20 உயர்ந்து ஒரு கிராம் ரூ.12,050க்கும் சவரனுக்கு ரூ.160 உயர்ந்து ஒரு சவரன் ரூ.96,400க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
அதே போல 18 காரட் தங்கம் விலையும் கிராமுக்கு ரூ.15 உயர்ந்து ஒரு கிராம் ரூ.10,045க்கும் சவரனுக்கு ரூ.120 உயர்ந்து ஒரு சவரன் ரூ.80,360க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலையும் கிராமுக்கு ரூ.2 உயர்ந்து ஒரு கிராம் ரூ.209க்கும், ஒரு கிலோ ரூ.2,09,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.





