முதலமைச்சரை பார்க்கச் சென்ற முதியவர் ரத்த வாந்தி எடுத்து உயிரிழப்பு..!
திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டியில் முதலமைச்சர் மு க ஸ்டாலினை பார்க்க சென்ற முதியவர் ரத்த வாந்தி எடுத்து மயங்கி விழுந்து உயிரிழந்தார். திண்டுக்கலில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்குவதற்கு முதலமைச்சர் மு க ஸ்டாலின் சென்றபோது அவரை வரவேற்க வழிநெடுக தொண்டர்கள் கூடியிருந்தனர்.
இதில் ஆரோக்கியசாமி என்பவர் திடீரென்று ரத்த வாந்தி எடுத்து மயங்கி விழுந்து உயிரிழந்தார். இந்நிலையில் செம்பட்டி காவலர்கள் சந்தேக மரணமாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.





