35 ஆண்டுகளுக்கு பிறகு 65 வயதில் காதலியை கரம்பிடித்த முதியவர்..!
கர்நாடகாவில் திருமணம் செய்து கொள்ளாமல் இருந்த 65 வயது முதியவர் தனது காதலியை 35 ஆண்டுகளுக்கு பிறகு மணந்த நிகழ்வு அனைவரையும் அதிர்ச்சி அடைய செய்துள்ளது. மைசூரில் உள்ள கெப்பாளையா பகுதியை சேர்ந்தவர் சிக்கண்ணா.
காதலுக்கு அவர்களது குடும்பத்தினர் மத்தியில் கடும் எதிர்ப்பு எழுந்ததால் இருவரும் திருமணம் செய்து கொள்ள முடியாமல் போனது. பெண் வீட்டில் பார்த்தவரை திருமணம் செய்துகொண்ட நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வந்தார்கள்.
தனது காதலி கணவரை விட்டு பிரிந்து தனியாக வாழ்ந்து வருவதாக தெரியவந்துள்ளது. எதிர்காலத்திலாவது கை கூடி ஒருவருக்கொருவர் துணையாக இருக்கலாம் எனக் கூறி இருவரும் திருமணம் செய்து கொண்டனர். காதலிக்காக 35 வருடம் காத்திருந்து மணமுடித்த இந்த ஜோடியின் காதல் கதை இணையத்தில் வைரலாகி வருகிறது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





