லாரியில் கொண்டு செல்லப்பட்ட இரும்பு குண்டு..கார் மீது உருண்டு விழுந்ததால் அதிர்ச்சி..!
கோவையில் லாரியில் கொண்டு செல்லப்பட்ட இரும்பு குண்டு நடுரோட்டில் உருண்டு விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. கோவை மாவட்டம் சுந்தராபுரம் எல்ஐசி காலனி பகுதியிலுள்ள தனியார் நிறுவனத்திற்கு இரும்பு குண்டை ஏற்றிக்கொண்டு லாரி சென்று கொண்டிருந்தது.
எதிர்பாராதவிதமாக லாரியில் இருந்து குண்டு சாலையில் உருண்டு விழுந்தது. உரிய பாதிப்பு இல்லாமல் இருந்து குண்டு செல்லப்பட்டதால் இந்த விபத்து ஏற்பட்டதாக அந்த பகுதியினர் தெரிவித்துள்ளனர்.





