திருமணம் முடிந்து வீடு திரும்பியவர்களுக்கு நேர்ந்த விபத்து..!
உத்திரபிரதேச மாநிலம் அருகே சாலையோர மரத்தில் கார்கள் மோதிய விபத்தில் திருமண நிகழ்ச்சியில் கலந்துவிட்டு திரும்பிய ஐந்து பேர் உயிரிழந்த சோக சம்பவம் நிகழ்ந்துள்ளது.
உத்தர பிரதேச மாநிலத்தை சேர்ந்தவர்கள் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின் இரண்டு கார்களுக்கு சொந்த ஊரில் திரும்பிக் கொண்டிருந்தனர். அந்த கார்கள் ஒன்றை ஒன்று முந்திச் செல்ல முயன்ற பொழுது கார்கள் சாலையோரம் உள்ள மரத்தில் மோதி விபத்தில் சிக்கியது.
இதில் ஐந்து பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். ஆறு பேர் காயமடைந்தனர். விபத்து குறித்து தகவல் அறிந்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனை அனுப்பி வைத்தனர். விபத்து தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார் மேலும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.






