மது போதையில் அரசு பேருந்து மீது கல் வீசிய இளைஞர்..!
ராணிப்பேட்டையில் மது போதையில் அரசு பேருந்து கண்ணாடி மீது கல் வீசி தாக்கிய போதை ஆசாமியை காவலர்கள் கைது செய்தனர். ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அடுத்த குளத்து மேடு பகுதி வழியாக வேலூர் நோக்கி அரசு பேருந்து சென்று கொண்டிருந்தது.
மர்ம நபர் ஒருவர் வழிமறித்து முன்பக்க கண்ணாடி மீது கற்களை வீசினார். மது போதையில் கண்ணாடியை உடைத்து அலப்பறையில் ஈடுபட்ட இளைஞரை கைது செய்தனர்.





