நாளை முதல் விமான பராமரிப்பு சங்கத்தினர் வேலைநிறுத்தம்..!
அனைத்து இந்திய விமான பராமரிப்புப் பொறியாளர் சங்கத்தினர்(AIAMEU) நாளை முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாக அறிவித்துள்ளனர்.
தற்காலிக ஊழியர்களாக பணிபுரிந்து வரும் தங்களை பணிநிரந்தரம் செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்து இந்த வேலைநிறுத்தத்தை நடத்த உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வேலைநிறுத்தம் காரணமாக விமான சேவைகள் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.






