--- --:--:-- --

அதிமுகவின் 2ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு..!

6

கர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் இரண்டாம் கட்ட பட்டியலை அந்தக் கட்சி வெளியிட்டுள்ளது. சேலம், திருச்சி, மதுரை, சிவகாசி, தூத்துக்குடி உள்ளிட்ட மாநகராட்சிகளில் வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியலை அதிமுக அறிவித்திருக்கிறது.

 

இதை போன்று 5 நகராட்சிகள், சேலத்தில் 6 நகராட்சிகள், செங்கல்பட்டு மாவட்டத்தில் 3 நகராட்சிகள், திருவள்ளூரில் 5 நகராட்சிகளில் போட்டியிடும் வேட்பாளர்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன.

 

திருவண்ணாமலை மாவட்டத்தில் 4 நகராட்சிகளும், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஒரு நகராட்சி, ஈரோடு மாவட்டத்தின் 4 நகராட்சிகளும் திருச்சியில் அனைத்து நகராட்சிகளிலும் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் விபரம் அறிவிக்கப்பட்டுள்ளது.

 

அரியலூர், மயிலாடுதுறை, மதுரை, விருதுநகர், சிவகங்கை, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் நகராட்சிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள பேரூராட்சிகள் வார்டு உறுப்பினர் பதவிகளுக்கான பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

Right Menu Icon