--- --:--:-- --

விபத்தில் மயங்கி கிடந்தவரை முதலுதவி செய்து மருத்துவமனையில் அனுமதித்த போலீசார்..!

2

சென்னை அமைந்தகரையில் சாலையை கடக்க முயன்ற பொழுது இரு சக்கர வாகனம் மோதி காயமடைந்தவரை பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசார் மீட்டு முதலுதவி அளித்து மருத்துவமனையில் அனுமதித்தனர். சாலையை கடக்க முயன்ற பாபு என்பவரை இருசக்கர வாகனம் மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டதாக கூறப்படுகிறது.

 

சாலையில் மயங்கி கிடந்த அவரை மீட்ட போலீசார் முதலுதவி செய்தனர். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை முடிந்து வீடு திரும்பியதாகவும் விபத்து ஏற்படுத்திய வரை தேடி வருவதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon