7 பேர் விடுதலையில் அதிமுக தவறான தகவல்களை பரப்புகிறது..!
ராஜீவ் கொலை வழக்கில் சிறையில் உள்ள எழுவர் விடுதலையில் ஆளுநர் விரைவில் நல்ல முடிவு எடுப்பார் என நம்புவதாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
சட்டப்பேரவையில் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேரறிவாளன், சாந்தன், முருகன் உட்பட 7 பேர் விடுதலை விவகாரத்தில் திமுக தொடர்ந்து தவறான தகவல்களை பரப்புவதாக குற்றம் சாட்டினார்.
கருணாநிதி முதல்வராக இருந்தபோது நளினியின் மரண தண்டனையை மட்டும் ஆயுள் தண்டனையாக குறைப்பதற்கான தீர்மானத்தை அமைச்சரவையில் நிறைவேற்றியதாகவும், பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோருக்கு கருணை மனுக்களை நிராகரிக்க முடிவை எடுத்ததாகவும் கூறினார்.
ஆனால் ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது பேரறிவாளன் உட்பட மூவரின் மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாகவும் எடப்பாடிபழனிசாமி குறிப்பிட்டார். மேலும் ஜெயலலிதா ஆட்சியில் ஏழு பேரையும் விடுதலை செய்ய முடிவு செய்ததையும் முதலமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
7 பேர் விடுதலை தொடர்பாக அடிக்கடி அறிக்கை வெளியிடும் திமுக பேரறிவாளன், சாந்தன், முருகனை விட்டுவிட்டு நளினியின் தண்டனை மட்டும் குறைக்க முடிவெடுத்தது ஏன் என்ற கேள்விக்கு மட்டும் இதுவரை பதில் தரவில்லை எனவும் முதலமைச்சர் தெரிவித்துள்ளார் .
தேர்தல் ஆதாயத்திற்காக இந்த விவகாரத்தில் திமுக நாடகம் நடத்துவதாகவும், ஆனால் அதிமுக அரசு அந்த ஏழு பேருக்கு உண்மையாக போராடி வருவதாகவும் முதல்வர் தெரிவித்துள்ளார். 7 பேர் விடுதலை விவகாரத்தில் முதல்வர் சட்டப்பேரவையில் விளக்கம் கேட்டார்.







