கொரொனாவை விட கொடியது அதிமுகவின் அரசியல்..!
கொரொனாவை விட கொடியது அதிமுகவின் அரசியல் என திமுக தலைவர் மு க ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார். கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் நடைபெற்ற உங்கள் தொகுதியில் ஸ்டாலின் நிகழ்ச்சியில் பேசிய அவர் இதனை தெரிவித்துள்ளார்.
கொரொனா காலத்திலும் டெண்டர் முறைகேடு செய்துள்ளதாகக் குற்றம்சாட்டியுள்ளார். அந்த காலத்தில் வழங்கப்பட்ட அனைத்து மருந்து பொருட்களிலும் ஊழல் செய்யப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார். மருந்தில் தொடங்கி ப்ளீச்சிங் பவுடர் வரை கொள்ளையடிக்கப்பட்டுள்ளது எனவும் கூறுகிறார்.






