பத்திரப்பதிவு அலுவலகங்களில் கூடுதல் டோக்கன் விநியோகம்..!
மாசி மாத சுபமுகூர்த்த நாளான இன்று, பத்திரப்பதிவு மேற்கொள்ள, கூடுதல் டோக்கன் வழங்க பதிவுத்துறை உத்தரவிட்டுள்ளது.
இதன்படி, வழக்கமாக, 100 டோக்கன் வழங்கப்படும் சார்-பதிவாளர் அலுவலகங்களில், 150 டோக்கன்களும், 200 டோக்கன் வழங்கப்படும் அலுவலகங்களில், 300 டோக்கன்களும் வழங்கப்படும் என பதிவுத்துறை அறிவித்துள்ளது. கடந்த மாதம் 10ஆம் தேதி ஒரே நாளில் ₹237 கோடி அரசு வருவாய் ஈட்டியது கவனிக்கத்தக்கது.






