--- --:--:-- --

வருங்கால கணவரின் புகைப்படத்துடன் திருமணத்தை அறிவித்த நடிகை பூர்ணா..!

13

முனியாண்டி விலங்கியல் மூன்றாமாண்டு திரைப்படம் மூலம் 2008ம் ஆண்டு தமிழ் சினிமாயில் நாயகியாக அறிமுகமானவர் நடிகை பூர்ணா. அதன்பிறகு கந்தகோட்டை, தகராறு, கொடிவீரன், அடங்க மறு, காப்பான் போன்ற படங்களில் தொடர்ந்து நடித்தார்.

 

சினிமாவிற்காக தான் பூர்ணா என்ற பெயர் வந்தது ஆனால் அவரது நிஜ பெயர் ஷம்னா கசிம். இவர் தனது இன்ஸ்டாவில் இன்று தான் திருமணம் செய்துகொள்ள போகும் நபருடன் எடுத்த புகைப்படத்தை பதிவிட்டு திருமணத்தை உறுதி செய்துள்ளார்.

 

அவர்களது ஜோடி புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் சூப்பர், வாழ்த்துக்கள் என வாழ்த்து கூறி வருகிறார்கள். பூர்ணாவின் வருங்கால கணவர் ஷனித் அசிப் UAEயில் தொழிலதிபராக உள்ளார். நிச்சயம் மட்டும் இப்போது உறுதி செய்துள்ளார்கள் எப்போது திருமணம் என தெரியவில்லை.

Right Menu Icon