--- --:--:-- --

10 கோடி மதிப்பிலான சொத்துக்களை மக்களுக்காக அடமானம் வைத்துள்ள நடிகர்..!

3

கொரொனா காலத்தில் பல்வேறு மக்கள் நல பணியில் ஈடுபட்டு பிரபலமானவர் ஹிந்தி நடிகர் சோனு சூட். நடிகர் விஜயகாந்த் நடித்த கள்ளழகர் படத்தில் தான் முதன் முறையில் சோனு சூட் அறிமுகமானார். அவரின் இரக்ககுணம் கொரொனா காலத்தில் வெளிப்பட்டுள்ளது.

 

கொரொனா பேரிடரின் போது மக்களுக்காக கோடிக்கணக்கில் பணம் செலவழித்தும் பல்வேறு உதவிகளை சோனு சூட் மேற்கொண்டு வந்தார். இடம்பெயர் தொழிலாளர்கள் சொந்த ஊருக்குத் திரும்ப உதவியது, செல்போன் டவர் கிடைக்கல அமைத்துக் கொடுத்தது, அறுவை சிகிச்சை செய்ய கோரிக்கை வைப்பவர்களுக்கு சொந்த செலவில் மருத்துவ உதவிகளை செய்வது என்று உதவிகள் தொடங்கினார்.

 

மக்களுக்கு உதவுவதற்காக சோனு சூட் தன் பெயரிலும் தனது மனைவி சோனாலி பெயரிலும் உள்ள எட்டு சொத்துக்களை ரூபாய் 10 கோடிக்கு ஸ்டேட் வங்கியில் அடமானம் வைத்து உள்ளார்.

 

இதற்கிடையே ஆசியாவின் மிகச்சிறந்த சில சினிமா ஆளுமை பட்டியலில் சோனு சூட் முதலிடம் பிடித்து அசத்தியுள்ளார். கொரொனா காலத்தில் இவர் மேற்கொண்ட சமூக பணிகளே அவரை முதலிடத்திற்கு தள்ளியதாக சொல்லப் படுகிறது.

Leave a Reply

Right Menu Icon