--- --:--:-- --

கோபத்தில் அனைவரையும் கத்திய நடிகர் விஜய்..!

13

மிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமான தளபதி விஜய் தற்போது இயக்குநர் வம்சி இயக்கத்தில் வாரிசு திரைப்படத்தில் நடித்து வருகிறார். பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படம் வரும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாக இருக்கிறது.

 

மேலும் தீபாவளிக்கு இப்படத்தின் ஏதாவது அப்டேட் வெளியாகும் என எதிர்பார்க்கபட்ட நிலையில் அன்று வாரிசு திரைப்படத்தின் முதல் சிங்கிள் பாடல் வெளியாகும் என அப்படத்தின் இசையமைப்பாளரே அறிவித்து இருந்தார்.

 

இந்நிலையில் தற்போது வாரிசு திரைப்படத்தின் ஷூட்டிங்கில் நடந்த அதிர்ச்சி சம்பவம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி நேற்று வாரிசு திரைப்படத்தின் பாடல் காட்சி ஷூட்டிங்கின் போது அதனை வீடியோ எடுத்து இணையத்தில் வெளியிட்டு இருந்தனர்.

 

இதனால் கடுப்பான விஜய் மீண்டும் ஷூட்டிங்கின் போது லைட் மேன் அனைவரையும் அழைத்து அவர்களிடம் கோபத்தில் கத்தினாராம். இதனால் விஜய் அப்படி கோபப்படுவாரா என அனைவரும் அதிர்ச்சிக்கு உள்ளானதாக சொல்லப்படுகிறது.

 

பின்னர் ஒட்டுமொத்த லைட் மேன்கள் மற்றும் ஜிம் ஆட்கள் உள்ளிட்டோரை வெளியே அனுப்பிவிட்டு ஷூட்டிங் நடத்தியதாக சொல்லப்படுகிறது.

Right Menu Icon