நடிகர் குத்தப்பட்ட வழக்கு: 1,000 பக்கத்தில் குற்றப்பத்திரிகை
பாலிவுட் நடிகர் சைஃப் அலி கான் கத்தியால் குத்தப்பட்ட வழக்கில் மும்பை போலீஸார் 1,000 பக்க குற்றப்பத்திரிகையை பாந்தரா நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர். கைதான ஷரிஃபுல் இஸ்லாமுக்கு எதிராக தடயவியல் அறிக்கை, கத்தி உள்ளிட்ட ஆதாரங்களையும் இணைத்துள்ளனர்.
கடந்த ஜனவரி மாதம் கொள்ளையடிப்பதற்காக சைஃப் அலிகான் வீட்டிற்குள் புகுந்த இஸ்லாம், அவரை கத்தியால் குத்திவிட்டு தப்ப முயன்றபோது கைதானார்.





