--- --:--:-- --

தனது அப்பாவின் பெயரை தனது மகனுக்கு சூட்டிய நடிகர் சிவகார்த்திகேயன்..!

9

டிகர் சிவகார்த்திகேயன் சமீபத்தில் பிறந்த தனது மகனுடன் எடுத்துக் கொண்ட புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. தொலைக்காட்சி நிகழ்ச்சி மூலம் மக்களின் மனதில் நீங்கா இடம் பிடித்த சிவகார்த்திகேயன் தன் விடா முயற்சி மூலம் தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவரானார்.

 

இவருக்கும் தன் சொந்த மாமன் மகளான ஆர்த்தி என்பவருக்கும் கடந்த 2010ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு 8 வயதில் ஆராதனா எனும் மகள் உள்ள நிலையில் கடந்த ஜூன் 12ஆம் நாள் இருவருக்கும் ஆண் குழந்தை பிறந்தது.

 

தந்தையை இளம் வயதிலேயே இழந்து சிவகார்த்திகேயன் தனது மகன் பிறந்தவுடன் 18 வருடங்களுக்கு பிறகு அப்பா தன் கை பிடித்ததாக தெரிவித்த நிலையில் அவரது பெயரான தாஸ் என்பதை இணைத்து மோகன்தாஸ் என தனது மகனுக்கு பெயரிட்டுள்ளார்.

 

இந்த நிலையில் இருவரும் இருப்பது போன்ற புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Leave a Reply

Right Menu Icon