புகைப்படத்தை கியூப்ஸை கொண்டு வரைந்த சிறுவனுக்கு நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து..!
தனது புகைப்படத்தை கியூப்ஸை கொண்டு வரைந்த கேரளாவைச் சேர்ந்த சிறுவனுக்கு திரைப்பட நடிகர் ரஜினிகாந்த் ஆடியோ வாயிலாக வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
கேரள மாநிலம் கொச்சியை சேர்ந்த ஆறு வயது சிறுவன் கியூப்ஸை பயன்படுத்தி நடிகர் ரஜினியின் உருவ படத்தை வரைந்து ட்விட்டரில் பதிவிட்டிருந்தார். இந்த வீடியோ வைரல் ஆன நிலையில் சிறுவனுக்கு ரஜினிகாந்த் பாராட்டுகளை தெரிவித்துள்ளார்.
முன்னதாக அந்த சிறுவன் பிரதமர் மோடி, கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் உள்ளிட்டோரின் உருவப் படங்களையும் கியூப்ஸை பயன்படுத்தி உருவாக்கியது குறிப்பிடத்தக்கது.






