நடிகர் தனுஷ் வெளியிட்ட அறிவிப்பால் உற்சாகமடைந்த அவரது ரசிகர்கள்..!
கர்ணன் பட வெற்றியை தொடர்ந்து மீண்டும் மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடித்துள்ளதாக நடிகர் தனுஷ் அறிவித்துள்ளார். மாரி செல்வராஜ் தனுஷ் கூட்டணியில் சமீபத்தில் வெளியான கர்ணன் படம் வரவேற்பை பெற்றது.
இந்த நிலையில் மீண்டும் மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடித்துள்ளதாக தனுஷ் அறிவித்துள்ளார். இதனை அவரது ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் கொண்டாடி வருகின்றனர். தற்போது ப்ரீ புரொடக்ஷன் பணிகள் நடந்து வருவதாகவும் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு தொடங்கும் எனவும் தனுஷ் தெரிவித்துள்ளார்.






