பிரச்சார வாகனத்தில் இருந்து தவறி விழுந்த நடிகர் பாலகிருஷ்ணா..!
ஆந்திர மாநிலம் இந்துப்பூரில் நடைபெற்ற பிரச்சாரத்தின் பொழுது பிரச்சார வாகனத்தில் இருந்து நடிகர் பாலகிருஷ்ணா தவறி விழுந்தார். தன்னுடைய சொந்த தகுதியான இந்துப்பூர் தொகுதியில் நடிகர் பாலகிருஷ்ணா சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.
பிரச்சார வாகனத்தில் நின்றவாறு தொண்டர்கள் ரசிகர்களின் வாழ்த்துக்களை ஏற்றுக் கொண்டிருந்த பாலகிருஷ்ணா திடீரென பிரச்சார வாகனம் இயக்கப்பட்டதால் அதிலிருந்து தவறி விழுந்தார். ஆனால் அவருக்கு எந்த காயமும் ஏற்படவில்லை.
சற்று நேரம் ஓய்வுக்கு பிறகு மீண்டும் தன்னுடைய சுற்றுப்பயணத்தை தொடர்ந்தார் பாலகிருஷ்ணா.



