அதிர்ச்சியில் தேமுதிக.. பிரேமலதா மீது வழக்கு பதிவு..!
தேர்தல் நடத்தை விதிகளை மீறியதால் தேமுதிக பொதுச் செயலாளர் மீது மூன்று பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தனது பிறந்த நாளை முன்னிட்டு தேமுதிக கட்சி அலுவலகத்தில் 300 பேருக்கு இலவச தையல் பயிற்சிக்கான டோக்கன்களை தேமுதிக பொதுச் செயலாளர் வழங்கியுள்ளார்.
இந்த நிலையில் தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக பிரேமலதா மீது தேர்தல் நடத்தும் அலுவலர் புகார் அளித்திருந்தார். அதன் அடிப்படையில் பிரேமலதா மீது மூன்று பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.






