ரசிகர்கள் குறித்து வருத்தம் தெரிவித்துள்ள நடிகர் அஜீத்..!
வலிமை படம் தொடர்பான தகவல் உரிய நேரத்தில் வெளியிடப்படும் என்றும் பொதுவெளியில் கண்ணியம் காக்க வேண்டும் என்றும் நடிகர் அஜீத் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுகுறித்துஇயக்குனர் வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித்குமார் நடித்து கொண்டிருக்கக்கூடிய திரைப்படம் வலிமை.
இந்த படம் யுவன் சங்கர் ராஜாவின் இசையமைப்பில் உருவாகி வருகிறது. போனிகபூர் இந்த படத்தை தயாரித்து வருகிறார். இந்த படம் எப்போது திரைக்கு வரும் என்பது குறித்த எதிர்பார்ப்பில் அஜித் ரசிகர்கள் காத்திருக்கின்றனர் .
இந்த சூழலில் பல்வேறு இடங்களில் அஜித்தின் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் ஷேர் சாட் மூலம் மட்டுமே படத்தின் அப்டேட் தங்களுக்கு எப்போது கிடைக்கும் என பதிவிட்டு வருகின்றனர். தற்போது ட்விட்டரிலும் வலிமை அப்டேட் ஹேஸ்டெக் ட்ரெண்டாகி வருகிறது.
இந்த சூழலில் தற்போது நடிகர் அஜித்குமார் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் கடந்த சில நாட்களாக எனது ரசிகர்கள் என்ற பெயரில் தான் அடுத்து இருக்கக் கூடிய வலிமை சம்பந்தமான படத்தின் அப்டேட் குறித்து அரசியல் விளையாட்டு பொது இடங்களில் கேட்பது வருத்தம் அளிக்கிறது என்று குறிப்பிட்டுள்ளார்.






