கேராளாவில் ரூ.6,000 கோடியில் பெட்ரோ கெமிக்கல் ஆலை..!
கேரளாவில் கொச்சியில் 6,000 கோடி ரூபாயில் அமைக்கப்பட்டுள்ள பெட்ரோ ரசாயன தொழிற்சாலையை பிரதமர் மோடி நாட்டுக்கு அர்பணித்து இருக்கிறார். தமிழக பயணத்தை முடித்துக்கொண்டு கேரளா சென்ற பிரதமர் கொச்சியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்றார்.
அங்கு பாரத் பெட்ரோலிய நிறுவனத்தில் பெட்ரோ கெமிக்கல் ஆலையை நாட்டிற்கு அர்பணித்த பிரதமர் இந்த ஆலையால் மிகப் பெரிய அளவில் அன்னியச் செலவாணி மீதமாகும் என தெரிவித்தார். மேலும் லாரிகள் உள்ளிட்ட கனரக வாகனங்களை ஏற்றிச் செல்லக்கூடிய சரக்கு கப்பல் போக்குவரத்தையும் அவர் தொடக்கி வைத்துள்ளார்.
இதன் பின் பேசிய பிரதமர்தாம் தொடங்கி வைத்த திட்டங்களால் நாட்டின் வளர்ச்சி விரிவடையும் என தெரிவித்தார். இதற்கிடையில் இந்த நிகழ்ச்சியில் பேசிய கேரள முதல்வர் பிணராயி விஜயன் பாரத் பெட்ரோலிய நிறுவன பங்குகள் விற்பதை மறைமுகமாக எதிர் கருத்து தெரிவிக்கிறார்.






