--- --:--:-- --

ஆட்சியர் போட்ட அதிரடி உத்தரவு.. கோவை மக்களுக்கு எச்சரிக்கை..!

4

ஸ்நோக் காய்ச்சல் பரவி வருவதால் பொது இடங்களில் முக கவசம் அணியும்படி கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார். பருவநிலை மாற்றம் காரணமாக வேகமாக காய்ச்சல் பரவி வருகிறது.

 

குழந்தைகள் மற்றும் முதியோர் அதிக அளவில் பாதிக்கப்பட்டு உள்ளதையடுத்து மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் அறிவுரைத்தல்களை வெளியிட்டுள்ளார். காய்ச்சல், உடல் வலி, தலைவலி, இருமல் ஆகியன இந்த வைரஸ் பாதிப்பின் அறிகுறிகளாக காணப்படுகின்றன.

 

பொதுவாக இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் 7 நாட்களில் குணமடைந்து விடுவர். இந்த காலகட்டத்தில் பொதுமக்கள் அனைவரும் குடிநீரை நன்றாக கொதிக்க வைத்து ஆற வைத்து குடிக்க வேண்டும் இருமல் வரும்போதும் தும்மும் போதும் உங்கள் வாயை கைகுட்டி அல்லது துணையால் மூடிக்கொள்ள வேண்டும்.

 

அடிக்கடி சோப்பு போட்டு கைகளை கழுவ வேண்டும். வெளியே செல்ல வேண்டும் என்றால் முக கவசம் அணிந்து கொள்ள வேண்டும். காய்ச்சல் வந்தவர்கள் மருத்துவர்கள் பரிந்துரைத்த மருந்துகளை உட்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 

Right Menu Icon