--- --:--:-- --

பெண் மீது ஆசிட் வீசிய நபரை பொதுமக்களே அடித்து கொன்றனர்!

8

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே கள்ளக்காதல் விவகாரத்தில் பெண் மீது ஆசிட் வீசி கொலை செய்தவரை பொதுமக்கள் சரமாரியாக அடித்து கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

ராசிபுரத்தை அடுத்த குருசாமி பாளையத்தை சேர்ந்த தனம் கணவர் இறந்த நிலையில் தனியாக வாழ்ந்து வந்தார். ஏற்கனவே திருமணமான இவரது மூன்றாவது மகளான விஜயா தர்மபுரியை சேர்ந்த சாமுவேல் என்பவருடன் வசித்து வந்ததாக கூறப்படுகிறது.

 

இந்தநிலையில் விஜயாவின் சகோதரி மகள் வசந்தி மீது சாமுவேல் செய்யப்பட்டுள்ளார். இதற்கு விஜயா எதிர்ப்பு தெரிவித்ததால் ஆத்திரமடைந்த சாமுவேல் தனத்தின் வீட்டிற்கு ஆசியுடன் கத்தியுடன் சென்றுள்ளார். அங்கு தனத்திற்கும் சாமுவேலுக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது.

 

இதனை அறிந்து தனத்தை காப்பாற்ற அப்பகுதி மக்கள் முயற்சித்துள்ளனர். தகவலறிந்து வந்த போலீசாரும் சாமுவேலை பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் தனத்தின் மீது ஆசிட் ஊற்றி அவரை வெட்டிக் கொலை செய்த சாமுவேல் பொதுமக்கள் மீதும் ஆசிட் வீசியுள்ளார்.

 

இதனால் ஆத்திரமடைந்த மக்கள் சாமுவேலை பிடித்து சரமாரியாக தாக்கினர். இதில் படுகாயம் அடைந்த சாமுவேல் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதனையடுத்து தனம் மற்றும் சாமுவேல் ஆகியோரின் உடல்களை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவத்தில் படுகாயமடைந்த பத்துக்கும் மேற்பட்ட மக்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon