விஜய் கட்சி நிர்வாகி மீது ஆசிட் வீச்சு..!
சென்னையில் விஜய்யின் தீவிர ரசிகரும், தவெக நிர்வாகியுமான தினேஷ் என்பவருக்கும், அரவிந்த் என்பவருக்கும் இடையே 2 நாட்களுக்கு முன் தகராறு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், வீடு புகுந்து தினேஷ் மீது ஆசிட் ஊற்றி கொல்ல முயன்ற அரவிந்த் உட்பட 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இச்சம்பவம் நடந்ததை தொடர்ந்து, குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தவெகவினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.





