கடத்தப்பட்ட இரண்டு மாத பெண் குழந்தை 6 மணி நேரத்தில் மீட்பு..!
ஹைதராபாத்தில் கடத்தப்பட்ட இரண்டு மாத பெண் குழந்தையை போலீசார் அதிரடியாக 6 மணி நேரத்தில் மீட்டுள்ளனர். குழந்தை கடத்தலில் ஈடுபட்ட ஒருவர் தனது மனைவி மற்றும் மனைவியின் தங்கையுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
இது குறித்து செய்தியாளர்களிடம் விளக்கிய மாநகர காவல் ஆணையர் ரஞ்சனி குமார் புகார் வந்த ஆறு மணி நேரத்தில் கண்காணிப்பு கேமராக்கள் உதவியுடன் குழந்தையைக் கடத்தியவர்கள் பிடிபட்டதாக தெரிவித்தார்.







