ஆதார் சிறப்பு முகாமில் மாணவர்களுக்கு கைரேகை பதிவு ஆகாததால் சிக்கல்..!
திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தில் ஆதார் விவரங்களை பதிவு செய்ய நீண்ட நேரம் காத்திருக்க வேண்டி உள்ளதால் அரசு பள்ளி மாணவர்கள் கடும் அவதிக்குள்ளாகினர்.
அரசு பள்ளிகளில் ஆதார் சிறப்பு மையங்கள் அமைக்கப்பட்டு மாணவர்களின் விவரங்கள் பதிவு செய்யப்பட்டு வருகிறது. இதனால் சில பள்ளிகளில் மாணவர்களின் கைரேகை பதிவு ஆகாததால் நத்தம் தாலுகா அலுவலகத்திற்கு செல்ல அறிவுறுத்தப்பட்டனர்.
தாலுகா அலுவலகத்தில் ஒரே நேரத்தில் ஏராளமானோர் கூடியதால் கடும் வெயிலில் மாணவர்கள் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. இதனால் பள்ளிகளில் ஆதார் சிறப்பு மையங்களை அதிகரிக்க பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.





